திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கிளம்பிய மோசமான விமர்சனங்கள்! முதன்முதலாக மனம் திறந்து நடிகை ரம்யா பாண்டியன் கூறியுள்ளதை பார்த்தீர்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 4வது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் மிகவும் சுவாரசியமாகவும் பரபரப்புடனும் சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த ஜனவரி 17ம் தேதி முடிவுக்கு வந்தது.
நடிகர் ஆரி ரசிகர்களிடம் அதிக வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளரானார். அதனைத் தொடர்ந்து பாலா இரண்டாவது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகை ரம்யா பாண்டியன். எதற்கும் கோபப்படாமல் பொறுமையாக சிரித்துக் கொண்டே இருக்கும் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
ஆனாலும் சிலர் அவரை ஊமை குசும்பு, விஷம் என மோசமாக விமர்சனம் செய்து வந்தனர். மேலும் அவரை குறித்து தவறாக பேசியும் வந்தனர். இந்த நிலையில் ரம்யா பாண்டியன் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அப்பொழுது ரம்யா, நான் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததிலிருந்து மோசமான விமர்சனங்களை பார்த்து வருகிறேன். அதனைக் கண்டு சோர்வு அடையவில்லை. கவலைப்படவும் இல்லை. இத்தகைய மோசமான விமர்சனங்களை பற்றி யோசிக்காமல் சந்தோஷமான விஷயங்களை மட்டுமே பார்க்க வேண்டும் என எண்ணுகிறேன் என்று கூறியுள்ளார்.