திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
3 வருஷம்.. தினமும் அப்படியேதான் செய்வார்! லவ் சீக்ரெட்டை போட்டுடைத்த நடிகை ரம்யா பாண்டியன்!!
தமிழ் சினிமாவில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து அவர் ஜோக்கர் திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலமானார். பின்னர் அவர் ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.
தொடர்ந்து அவருக்கு பெருமளவில் படவாய்ப்புகள் எதுவும் வராத நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதை கொள்ளை கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் பெருமளவில் பிரபலமான அவர் தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்பொழுது அவர், நான் கல்லூரியில் படிக்கும் போது ஒருவர் பேருந்து நிலையத்தில் நின்று என்னை பார்த்துக் கொண்டே இருப்பார். நான் கல்லூரியை விட்டு திரும்பி வரும்போதும் அவர் அங்கேயே நின்று பார்த்து கொண்டிருப்பார். அவ்வாறு மூன்று வருடமாக அவர் என்னை பாலோ செய்தார். ஒருநாள் என்னிடம் வந்து அந்த நபர் ப்ரொபோஸ் செய்தார். மனசுக்குள் பயம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்காமல் உடனே நான் நோ சொல்லிவிட்டேன் என ரம்யா பாண்டியன் கூறியுள்ளார்.