திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிறந்தநாளில் ராசி கண்ணா செய்த வித்தியாசமான செயல்... குவியும் வாழ்த்துக்கள்!! புகைப்படம் இதோ
தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராசி கண்ணா. இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து ராசி கண்ணா ரசிகர்களுக்கு பரிச்சயமான நாயகியானார்.
அதனைத் தொடர்ந்து அவர் அடங்கமறு, சங்கத்தமிழன் மற்றும் அயோக்யா போன்ற திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. நடிகை ராசி கண்ணா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக உள்ளார். மேலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ராசி கண்ணா அவ்வப்போது போட்டோ ஹூட் புகைப்படங்கள் மற்றும் ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ராசி கண்ணா தற்போது அவரது பிறந்தநாள் அன்று வித்தியாசமாக செடி நட்டு கொண்டாடி இருக்கிறார். பெற்றோருடன் இணைந்து பிறந்தநாளில் ராசி கண்ணா செடி நட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.