#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வேற லெவல்.. இவங்களை மாதிரிதான் இருக்கணும்! ஆணாதிக்கம் குறித்து பிரபல இளம் நடிகை கூறியதை பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷிகண்ணா. பின்னர் அவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு என்ற படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் விஷாலின் அயோக்யா, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் மலையாளத்தில் ஒரு படத்திலும், ஹிந்தியில் இரு வெப்சீரிஷிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அவர், சினிமாத்துறையில் ஆணாதிக்கம் மிகுந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் இப்படிப்பட்ட நிலையிலும் பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி முன்னேறிதான் வருகின்றனர்.
அனுஷ்கா, சமந்தா போன்ற திறமையான நடிகைகளால் மட்டும்தான் சினிமாவில் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க முடியும். அவர்கள் தென்னிந்திய நடிகைகள் மீதான பார்வையை மாற்றியுள்ளனர். அவர்களுக்கு முன்பு வரை ஹீரோயின்கள் என்றாலே அழகாக இருக்கணும், பாடல் காட்சிக்கு நடனமாடனும் என்ற நிலைமைதான் இருந்தது. ஆனால் தற்போது ஹீரோயின்களுக்கு நன்றாக நடிக்கத் தெரிய வேண்டும் என மாறியுள்ளது என்று கூறியுள்ளார்.