திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாவ்.. செம கியூட்டாக இருக்கும் இந்த குட்டி ஏஞ்சல் யார் தெரியுமா?? அட.. தளபதி பட ஹீரோயின்தான்!!
2016ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த 'கிரிக் பார்ட்டி' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனை தொடர்ந்து அவர் தெலுங்கில் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார். மேலும் இப்படத்தின் மூலம் அவர் அனைத்து மொழி ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.
பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து அவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். அண்மையில் ராஷ்மிகா ரன்வீர் கபூருடன், இணைந்து நடித்து வெளிவந்த அனிமல் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
தொடர்ந்து ராஷ்மிகா தற்போது புஷ்பா 2, ரெயின்போ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேஷனல் கிரஷ் ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் க்யூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றன.