மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. சிவகார்த்தியேனின் அடுத்த படத்தில் ஹீரோயின் இவரா? எகிறும் எதிர்பார்ப்பு!!
தமிழ் சினிமாவில் தனது விடா முயற்சியால், கடின உழைப்பால் முன்னேறி தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் அண்மையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்திருந்த படம் டாக்டர். அப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று 100 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது.
அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் டான், அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். டான் திரைப்படம் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஜதி ரத்னலு என்ற தெலுங்கு படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் அனுதீப் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் துவங்கவுள்ளது. இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி யார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியது.
இதற்கிடையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.