திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடேங்கப்பா.. நயன்தாரா, திரிஷாலாம் ஓரங்கட்டிய ராஷ்மிகா.! அதுவும் எந்த விஷயத்தில் பார்த்தீங்களா!!
கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுலகில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா. தொடர்ந்து அவர் தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்து என்ட்ரி கொடுத்தார்.
பாலிவுட்டிலும் கலக்கும் ராஷ்மிகா
அதனைத் தொடர்ந்து அவர் புஷ்பா, வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் இவர் பாலிவுட்டிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். அவர் தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டாரான சல்மான் கானுக்கு ஜோடியாக சிக்கந்தர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார்.
ராஷ்மிகா சம்பள விவரம்
இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்காக ராஷ்மிகா வாங்கியுள்ள சம்பள விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சிக்கந்தர் படத்தில் நடிப்பதற்காக நடிகை ராஷ்மிகா ரூ.15 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின் அவருக்கு ரூ.13 கோடி சம்பளமாக வழங்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னணி நடிகைகளான நயன்தாரா, திரிஷா ஆகியோர் 10 முதல் 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றனர். அவர்களை ராஷ்மிகா ஓரம்கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.