திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கருப்பு நிற உடையில் கலக்கல் போட்டோஷூட் நடத்திய ராஷ்மிகா மந்தனா.. வைரல் புகைப்படங்கள்!
இந்திய அளவில் அதிக ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாகின.
அதன் மூலம் தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகையாக ராஷ்மிகா மந்தனா வலம் வந்தார். மேலும், நடிகர் அல்லு அர்ஜுனுடன் நடித்த புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுத் தந்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். சமீபத்தில் வெளியான அனிமல் பாலிவுட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் ஒரு சில திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது அவர் கருப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.