மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிஸியாகும் ராஷ்மிகா மந்தனா.. ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்தியதால் தயாரிப்பாளர்கள் குழப்பம்!
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவருடைய திரைப்பயணம் கன்னடத்தில் தொடங்கினாலும், தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.
தென்னிந்தியாவில் நடிகை ராஸ்மிகா மந்தனாவை நேஷனல் கிரஷ் என்று அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு திரைப்படங்களில் இருக்கும் ரசிகர்கள் போலவே சமூக வலைதளங்களிலும் இவரை பலரும் பின்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட் சினிமாவில் தனது கால் தடம் பதித்து வெற்றிகரமாக நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், 900 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர், புஷ்பா 2, ரெயின்போ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், அனிமல் படத்திற்காக ராஷ்மிகா மந்தனா ரூ.4 கோடி சம்பளம் வாங்கியதாகவும், அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்களுக்கும் இதே சம்பளத்தை அவர் கேட்பதாக தகவல் வெளியாகியது.
இதுகுறித்து பேசிய ராஷ்மிகா மந்தா, 'நான் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறுகிறார்கள் இதைக் கேட்ட பின்புதான் சம்பளத்தை உயர்த்த வேண்டுமென தோன்றுகிறது. சினிமா தயாரிப்பாளர்கள் யாராவது கேட்டால், மீடியாக்களில் இப்படித்தான் கூறுகிறார்கள், அதனால், அவர்களின் வார்த்தை படியே வாழ வேண்டும் என தெரிவிக்கப் போகிறேன்' என கூறியுள்ளார்.