திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆஸ்திரேலியாவிற்கு பறந்த ராஷ்மிகா மந்தானா.! என்ன காரணம் தெரியுமா.!?
இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தானா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தானா.
முதன் முதலில் தெலுங்கில் அறிமுகமான ராஷ்மிகா மந்தானா, பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்தார். இதன் பின்பு தமிழில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு, போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பான் இந்தியா திரைப்படமான 'புஷ்பா' திரைப்படத்தில் இவர் நடிப்பு ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.
மேலும் சமீபத்தில் இந்தியில் ரன்பீர் கபூருடன் நடித்து வெளியான திரைப்படம் 'அனிமல்'. இப்படம் பல சர்ச்சைகளுக்கு உள்ளானாலும் தேசிய விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார் ராஷ்மிகா மந்தானா.
இது போன்ற நிலையில் திரைத்துறையில் மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகையாக இருக்கிறார். முன்னதாக விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஜப்பானிற்கு சென்று பல புகைப்படத்தினை பதிவிட்டார் ராஷ்மிகா. தற்போது ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று அங்கிருந்து புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். ராஷ்மிகாவின் திடீர் ஆஸ்திரேலியா பயணம் குறித்த காரணம் என்னவென்று தெரியவில்லை.