திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ராஷ்மிகா மந்தானாவா இது.! வெளியான வீடியோவை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.!?
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் ராஷ்மிகா மந்தானா. இந்திய அளவில் பல கோடி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு நேஷனல் கிரஷாக வலம் வருகிறார். முதன் முதலில் தெலுங்கில் கிறுக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென தனி இடத்தை இந்திய மொழி சினிமாவில் தனது நடிப்பு திறமையின் மூலம் நிலைநாட்டி இருக்கிறார் ராஷ்மிகா மந்தானா. குறிப்பாக விஜய் தேவர் கொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தானா நடித்த பல திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றி அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழிகளில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து தமிழில் வாரிசு இந்தியில் அனிமல் போன்ற திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான கதாநாயகியாக இருந்து வருகிறார்.
இதுபோன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தானா. இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் போட்டோ ஷூட் செய்து வீடியோவை பதிவிட்டுள்ளார். டோக்கியோவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.