திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"பல வருடங்களாக கண்ட கனவு நிறைவேறிவிட்டது" ராஷ்மிகாவின் நெகிழ்ச்சியான பதிவு.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தானா. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்திய மொழி சினிமாவில் ரசிகர்களின் மத்தியில் நேஷனல் கிரஸ் என்ற பெயர் பெற்றுள்ளார்.
தமிழில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமாகவே உள்ளது. இவ்வாறு தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென்று தனிஇடத்தை இந்திய சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார் ராஷ்மிகா மந்தானா. சமீபத்தில் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா மந்தானா நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதனை அடுத்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி பிஸியான நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தானா, சமீபத்தில் ஜப்பானிற்கு சென்றுள்ளார். இது தொடர்பான பதிவுகளை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இதன்படி இவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில் "என்னுடைய சிறு வயதிலிருந்து கண்ட கனவு நிறைவேறி விட்டது.
ஜப்பான் செல்ல வேண்டும் என்பதுதான் எனக்கு மிகப்பெரிய கனவாகவே இருந்து வந்தது. இது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கவில்லை. இங்குள்ள மக்களின் அன்பு, சுற்றுச்சூழல், பொருளாதாரம் என அனைத்துமே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இனி அடிக்கடி ஜப்பான் வர வேண்டும்" என்று மிகவும் ஆவலாக பதிவிட்டிருந்தார். இப்பதிவில் ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.