மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த பிரச்சினைக்கு காரணமே அந்த 2 கோடிதான்! ஒரு வருசத்துக்கு பின் முதன்முதலாக உண்மையை உடைத்த நடிகை ராஷ்மிகா!!
கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதனை தொடர்ந்து அவர் தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பின்னர் அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் ராஷ்மிகா தமிழில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் அறிமுகமாகவுள்ளார். நடிகை ராஷ்மிகாவின் வீடு கர்நாடக மாநிலம் குடகு விராஜ் பேட்டையில் அமைந்துள்ளது. அங்கு கடந்த ஆண்டு வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். இந்த நிலையில் அதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்த ராஷ்மிகா தற்போது விளக்கமளித்துள்ளார்.
அதில், அப்போது ஒரு படத்துக்கு நான் 2 கோடி சம்பளம் வாங்குவதாக செய்திகள் பரவியது. அதுதான் வருமானவரி துறையினர் என் வீட்டில் சோதனை செய்ய காரணம். உண்மையிலேயே நான் ரூ.2 கோடி சம்பளம் வாங்கவில்லை. நான் கேட்டாலும் தயாரிப்பாளர்கள் தர மாட்டார்கள். மேலும் நான் ஐதராபாத்தில் புது வீடு வாங்கியதை பற்றி பேசுகிறார்கள் . ஓட்டலில் தங்குவது சிரமமாக இருந்தது. அதனாலேயே வீடு வாங்கினேன். என்னை பற்றி வரும் கிசுகிசுக்கள் முதலில் வருத்தமாக இருந்தது. இப்ப நான் அதை கண்டுகொள்வதில்லை என ராஷ்மிகா கூறியுள்ளார்.