திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"என் வாழ்வில் வந்ததற்கு நன்றி" ராஷ்மிகா ட்வீட்! யாருக்கு இந்த பதிவு? ரசிகர்கள் குழப்பம்!
கன்னடத்தில் வெளியான "கிரீக் பார்ட்டி" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கில் இவர் நடித்த 'புஷ்பா" படம் மூலம் மிகவும் பிரபலமானார்.
தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூருடன் இவர் நடித்துள்ள "அனிமல்" திரைப்படம் பல எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும், இப்படம் உலக அளவில் 800கோடி ரூபாயும், இந்திய அளவில் 500கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.
இந்நிலையில் ராஷ்மிகாவுடன் "கீதா கோவிந்தம்" படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலிப்பதாகவும், இருவரும் இணைந்து டேட்டிங், வெளிநாட்டு ட்ரிப் செல்வதாகவும் தொடர்ந்து புகைப்படங்களும் , செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் ராஷ்மிகா தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் "நீ என் வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு விஜய் தேவரகொண்டாவிற்கு தான் என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.