மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. லியோ படத்தில் தளபதி விஜய்யின் கேரக்டர் இதுதானா.! சீக்ரெட்டை பகிர்ந்த பிரபலம்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் லியோ படத்தில் இடம் பெற்ற முதல் பாடலான "நா ரெடி” பாடல் அண்மையில் தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது.
இந்நிலையில் தளபதி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் லியோ திரைப்படம் குறித்த சுவாரசியமான தகவலை வசனகர்த்தாவான ரத்னகுமார் பகிர்ந்துள்ளார். அதாவது லியோ படத்தில் தளபதி விஜய் அப்பாவி குடும்ப தலைவராகவும், அதிரடி கேங்ஸ்டராகவும் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ரத்னகுமார் மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ படங்களில் வசனம் எழுதியுள்ளாராம்.