மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீ மான்குட்டி.. நான் யானைக்குட்டி.! மனைவியை வித்தியமாசமாக வர்ணித்து கொஞ்சிய ரவீந்தர்.! வைரலாகும் புகைப்படம்!!
தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் நட்புனா என்னன்னு தெரியுமா? ஆகிய திரைப்படங்களை தயாரித்து பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் ரவீந்தர். இவர் தொலைக்காட்சி தொடர்களில் ஹீரோயின், வில்லி என பல கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை மகாலட்சுமியை கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். இவர்களது திருமணம் இணையத்தில் சர்ச்சையாக பேசப்பட்டது. இவர்களது உருவத்தை, ஜோடியை கேலி செய்து பலரும் பல கருத்துக்களை கூறி வந்தனர். ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் அவர்கள் இருவரும் தங்களது மகிழ்ச்சியான தருண புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் ரவீந்தர் தற்போது தனது மனைவி மகாலட்சுமியுடன் லேட்டஸ்டாக எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, நீ மஞ்சள் நிறம் கொண்ட மான் குட்டியோ.. இல்ல மஞ்சள் சுடிதார் போட்ட பெண் குட்டியோ.. ஆனா உன்கூட வாழ்க்கைய ரசிச்சு வாழுற யானைக்குட்டி நான் தான்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.