#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நிர்வாணமாக கூட நடிப்பேன்! உங்களுக்கென்ன?? நடுரோட்டில் நடிகரை வெளுத்து வாங்கிய நடிகை ரேகா நாயர்!!
பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இரவின் நிழல். இந்தப் படத்தை அகிரா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் பார்த்திபன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரிகிடா எனும் புது நாயகி அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் வரலட்சுமி, ரேகா நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.படம் கடந்த வெள்ளியன்று வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் சில சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. அதாவது இப்படத்தில் பிரிகிடா மற்றும் ரேகா நாயர் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக நடித்திருந்தனர். இதற்கு விமர்சனம் எழுந்தாலும் அவர்களது முயற்சிக்கு பாராட்டும் கிடைத்தது. இதற்கிடையில் நடிகர், நடிகைகள் குறித்து அவதூறான கருத்துக்களைப் பரப்புவதாக குற்றம் சாட்டப்படும் பயில்வான் ரங்கநாதன் இதுகுறித்து மோசமாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரேகா நாயர் நடைபயிற்சி சென்றுகொண்டிருந்த போது பயில்வான் ரங்கநாதனை நிறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நான் நிர்வாணமாக கூட நடிப்பேன். உங்களுக்கு என்ன? என்று கேட்டு காட்டமாக பேசியுள்ளார். அதனை தொடர்ந்து இருவரையும் அங்கிருந்த பொதுமக்கள் விலக்கி அனுப்பியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.