#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"தாலியை கட்டிக்கிட்டு கண்டமேனிக்கு சுத்தறாங்க!" பெண்களை தரக்குறைவாக பேசிய ரேகா நாயர்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான "ஆண்டாள் அழகர்" தொலைக்காட்சித் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரேகா நாயர். சன் டிவி, கலர்ஸ், ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தொடர்களிலும் நடித்துள்ளார்.
இதையடுத்து வெள்ளித்திரைக்கு வந்த ரேகா நாயர், கதகளி, போக்கிரி ராஜா, தெறி, இரவின் நிழல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இறுதியாக இவர் நடித்த இரவின் நிழல் படத்தில் இவரது கதாப்பாத்திரம் மிகவும் சர்ச்சைக்குரியதாக, பல விமர்சனங்களைப் பெற்றது.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பேட்டி கொடுத்து வரும் ரேகா நாயர், பெரும்பாலும் பெண்களைத் தரக்குறைவாக பேசி வருகிறார். அந்த வகையில் தற்போது "தமிழா தமிழா" நிகழ்ச்சியில் "பெண்களுக்கு சுதந்திரம் போதுமானதாக இருக்கிறதா? இல்லையா?" என்ற தலைப்பில் பேசினார்.
அதில் அவர், "தாலியைக் கட்டிக்கொண்டு கண்டமேனிக்கு ஊர் சுற்றுவது, லிவிங் உறவில் இருப்பது எல்லாம் பெண்களுக்கு கொடுக்க கூடிய சுதந்திரம் தான் காரணம். திருமணம் செய்துகொள்ளாமல் பத்து பேருடன் கூட இருங்கள்" என்று பெண்களை பற்றி தரக்குறைவாக பேசியுள்ளார் ரேகா நாயர்.