#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"எந்த டிரஸ் போட்டாலும் ஆபாசமாக தான் பார்ப்பீங்க" ரேகா நாயரின் சர்ச்சையான பேச்சு.!?
தமிழ் திரைத்துறையில் சர்ச்சையான நடிகையாக இருந்து வருபவர் ரேகா நாயர் இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் சின்ன திரையிலும் நாடகங்களில் நடித்து பிரபலமானவராக இருந்து வருகிறார். சர்ச்சைக்கு பெயர் போன நடிகை என்றாலே அது ரேகா நாயர் தான்.
இந்நிலையில் பார்த்திபன் இயக்கத்தில் 2023 ஆம் வருடம் வெளியான 'இரவின் நிழல் திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் ரேகா நாயர் நடித்திருந்தார். இப்படத்தில் உடை அணியாமல் ஆபாசமாக நடித்ததை குறித்து பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் இவரை கொச்சையாக விமர்சித்தார். இதற்கு நடுரோட்டில் அவரிடம் சண்டை போட்டு வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதன் பிறகு யூட்யூபில் பெண்கள் ஆண்களை கவரும் விதமாக உடை அணியக்கூடாது என்று சர்ச்சையாக பெண்களை குறித்து பேசி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரேகா நாயரை அனைவரும் திட்டி கமெண்ட் செய்து வந்தனர். இதனை அடுத்து தற்போது மீண்டும் யூ ட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் ரேகா நாயர்.
அந்த பேட்டியில் கூறியதாவது, "ஆடையில் ஆபாசம் இல்லை. பார்வையில் தான் ஆபாசம் உள்ளது. எந்த டிரஸ் போட்டாலும் ஆபாசமாக தான் ஆண்கள் பார்ப்பார்கள். முதலில் இப்படி ஆடையில் தான் ஆபாசம் உள்ளது என்று நினைப்பதை மாற்ற வேண்டும்" என்று கூறியிருந்தார். இதற்கு பல ஆண்கள் எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது சர்ச்சையை கிளப்பி வருகிறது.