#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
2 முறை தற்கொலைக்கு முயன்றேன்.. உண்மையை உடைத்த நடிகை ரேகா நாயர்.!
பிரபல சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் சின்னத்திரை சீரியல் மற்றும் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதேபோல் இவர் சில நேரங்களில் பரபரப்பான மற்றும் அதிரடியான கருத்துக்களை கூறி விமர்சனத்துக்குள்ளாகி வருவார்.
சமீபத்தில் நடிகர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்படி ராணி என்ற கதாபாத்திரத்தில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக படித்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் மேலாடையின்றி அரைநிர்வாணமாக நடித்தற்கு விமர்சனமும் எழுந்தது.
இந்த நிலையில் நடிகை ரேகா நாயர் மூன்று முறை தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு தகவல் ஒன்றை கூறியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் எனது சான்றிதழ்கள் அனைத்தையும், எனது கணவர் கிழித்து விட்டதால் ஆத்திரத்தில் நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். ஆனால் அதன் பிறகு படிக்க ஆரம்பித்து இன்று 10 பேருக்கு தெரியும் அளவிற்கு வளர்ந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.