#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கறிவேப்பிலை போல் தூக்கி எறியப்படும் நடிகைகள்.. மனக்குமுறலை வெளிப்படுத்திய ரேகா.!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரேகா. தற்போது இவர் ரியாலிட்டி ஷோ மற்றும் ஒரு சில திரைப்படங்களில் அம்மா போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ரேகா அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் மிரியம்மா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் விழாவில் பேசிய நடிகை ரேகா 40 வயதை கடந்த நடிகைகள் கறிவேப்பிலை போல தூக்கி எறியப்படுவதாக மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் கமர்சியல் திரைப்படங்களில் நடிகைகளுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகவும், தன்னைப் போன்ற நடிகைகளுக்கு பணம் பெரிய விஷயம் இல்லை எனவும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து நிரூபிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் கடைசி வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே தனது ஆசை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.