மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடியரசு தினத்திற்கு சன் டீவியில் என்ன சிறப்பு திரைப்படம் தெரியுமா? மூன்று சூப்பர் ஹிட் திரைப்படங்கள்!
தமிழ் மட்டும் இல்லாது இந்திய அளவில் TRP இல் முதல் இடத்தில் இருப்பது சன் டிவி. சன் தொலைக்காட்சி ஆரம்பித்த நாளில் இருந்து இன்றுவரை சன் தொலைக்காட்சியை அடித்துக்கொள்ள வேறு நிறுவனமே இல்லை என்ற அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது சன் தொலைக்காட்சி. புது புது தொடர்கள், புது புது நிகழ்ச்சிகள் என நாளுக்கு நாள் புது புது நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது சன் டிவி.
சன் தொலைக்காட்சியின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான். இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்த காலம் மாறி தற்போது இளைஞர்கள், இளம்பெண்கள் என பலர் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
சீரியல்களை தாண்டி சன் டீவியில் மேலும் பிரபலமான ஓன்று சன் டீவியில் ஒளிபரப்பாகும் புது படங்கள். முன்பெல்லாம் பண்டிகை நாட்கள் என்றாலே சன் டீவியில் என்ன படம் என மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் தற்போது புதிதாக வெளியான படங்களை ஒளிபரப்பினால்கூட மக்கள் அதிக விருப்பம் காட்டுவது இல்லை.
இந்நிலையில் நாளை, அதாவது குடியரசு தினத்தை முன்னிட்டு மூன்று சூப்பர் ஹிட் படங்களை ஒளிபரப்புகிறது சன் டிவி. அதன்படி, காலை 11 மணிக்கு தேவி திரைப்படம், மாலை 3 மணிக்கு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
மாலை 6 மணிக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், AR முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.