மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுஷாந்த் சிங் அப்படிப்பட்டவர்தான்.. அவங்களுக்கும் தெரியும்! காதலி ரியா கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தல எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஆண்டு
ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சுஷாந்த் சிங் மரணம் குறித்து சி.பி.ஐ அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அப்போது சுஷாந்தின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடல்களை கண்காணித்த நிலையில் அவருக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடிகை ரியா, அவரது தம்பி சோவிக் மற்றும் வீட்டு பணியாட்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். மேலும் சில பிரபலங்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரியா அளித்த வாக்குமூலத்தில், சுஷாந்த் சிங் போதைக்கு அடிமையானவர். அவரது அக்கா பிரியங்கா சிங், மைத்துனர் சித்தார்த் ஆகியோரும் அவருடன் சேர்ந்து கஞ்சா பயன்படுத்தினர். மேலும் சுஷாந்த் கஞ்சா பயன்படுத்துவது அவரது குடும்பத்தினருக்கு தெரியும். அவர்களே சுஷாந்திற்கு கஞ்சா வாங்கி கொடுத்துள்ளனர் எனவும் கூறியுள்ளார். மேலும் தன்னுடன் பழகுவதற்கு முன்பே சுஷாந்த்சிங்கிற்கு கஞ்சா பழக்கம் இருந்ததாகவும் ரியா கூறியுள்ளார்.