மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கிரிக்கெட் மைதானத்தில் ஒருவரையொருவர் திட்டி கொண்ட நடிகர்கள்.? ஆர் ஜே பாலாஜி, யோகி பாபு மோதலா.?
சென்னை சேர்ந்த பிரபல வானொலி ஒளிபரப்பாளரான ஆர் ஜே பாலாஜி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுத்து வழங்கியிருக்கிறார். நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த ஆர் ஜே பாலாஜி, முதன் முதலில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரவுடிதான' திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்துள்ளார். இவரின் காமெடியான பேச்சை ரசிப்பதற்காகவே ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் கமெண்ட்ரி செய்து வருகிறார்.
மேலும் கிரிக்கெட் போட்டியை காண வந்த நட்சத்திரங்களை அழைத்து கமெண்ட்ரியல் பேசிக் கொண்டிருப்பார். இதன்படி நடிகர் யோகி பாபுவை அழைத்து இருவரும் பேசிக்கொண்டனர். அவர்கள் பேசிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
அதாவது யோகி பாபு மற்றும் ஆர்.ஜே பாலாஜி இருவரும் ஒருவருக்கொருவர் கலாய்த்து கொண்டனர். ஆர் ஜே பாலாஜி, யோகி பாபுவை ஆங்கிலம் பேசுமாறு கூற யோகி பாபு எனக்கு ஆங்கிலம் தெரியாது, நான் டென்த் பெயில் என கூறியிருக்கிறார். அதற்கு ஆர் ஜே பாலாஜி நான் 12த் பெயில் என இருவரும் மாற்றி மாற்றி கலாய்த்தது அனைவரும் சிரிக்கும்படியாக இருந்தது.