மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேட்டான ராபர்ட் மாஸ்டர் வெளியிட்ட முதல் வீடியோ.! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 6வது சீசன் 8 வாரங்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் 21 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டநிலையில் ஜி.பி முத்து துவக்கத்திலேயே தானாக வீட்டை விட்டு வெளியேறினார்.
அவரை தொடர்ந்து சாந்தி மாஸ்டர், அசல் கோளார், ஷெரினா, நிவாஷினி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனர். இந்த நிலையில் நிகழ்ச்சியில் இறுதிவரை செல்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த ராபர்ட் மாஸ்டர் நேற்று பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவர் முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தாச்சு. பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது எனக்கு ஓட்டு போட்ட எனது ரசிகர்கள்,குட்டீஸ்கள், அம்மா, அப்பா அனைவருக்கும் நன்றி. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் ஆதரவுக்கு நன்றி டார்லிங்ஸ் என கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.