அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
அந்த நடிகை ஒரு மெழுகு சிலை!! பார்த்துகிட்டே இருக்கனும்போல இருக்கு..!! ரோபோ சங்கர் சொன்னது யாரை தெரியுமா??
பிரபல நடிகை ஒருவரை மெழுகு சிலை என புகழ்ந்து பேசியுள்ளார் நடிகர் ரோபோ சங்கர்.
விஜய் தொலைக்காட்சிமூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான பலரில் ஒருவர் ரோபோ சங்கர். காமெடி, குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்துவரும் இவர், அடுத்ததாக சிண்ட்ரெல்லா என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் ரோபோ சங்கர், "சிண்ட்ரெல்லா திரைப்படம் மிகவும் நன்றாக இருக்கும். படம் திரையில் வெளியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் நடிகை ராய் லட்சுமியுடன் ஒரு காட்சி உள்ளது. அதில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இருக்கும்.
நான் பேசும் போது, எந்த நடிகையாக இருந்தாலும் அந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ராய் லட்சுமி எந்த கோவமும் இன்றி அந்த வசனங்களை ரசித்தார். அவர் பார்ப்பதற்கு மெழுகு சிலை போல் அழகாக உள்ளார். லட்சுமி. அவரை பார்த்துக் கொண்டே இருக்கணும் போல இருக்கிறது" என பேசியுள்ளார் ரோபோ சங்கர்.