மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரோபோ சங்கரின் மகளுக்கு திருமணமா.? யாருடன் தெரியுமா ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த இந்திரஜா.!
விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர். விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் ரோபோ போல் பேசியும், நடனமாடியும் மக்களை சிரிக்க வைத்ததால் இவருக்கு 'ரோபோ சங்கர்' என்று பெயர் வந்தது.
சின்னத்திரையில் இருந்துவெள்ளித்திரைக்கு சென்ற ரோபோ சங்கர், முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா குறித்து தற்போது செய்தி வெளியாகியிருக்கிறது.
இந்திரஜா விஜய் நடிப்பில் வெளியான 'மெர்சல்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. இதனையடுத்து தற்போது இந்திரஜாவிற்கு திருமணம் நடக்க போகிறது என்று இணையத்தில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் வருங்கால கணவரின் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைபடத்தில் கமெண்ட் செய்த நெட்டிசன்கள் யாரென்று கேள்வி கேட்கவே என் வருங்கால கணவர் என்று இந்திரஜா பதில் அளித்திருக்கிறார். திருமணம் எப்போது என்று உறுதி செய்யப்படும்போது சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார் இச்செய்தி வைரலாகி வருகிறது.