பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடேங்கப்பா..வேற லெவல்! நடிகர் ரோபோ ஷங்கரா இது! பாடி பில்டராக எப்படியிருந்துள்ளார் பார்த்தீங்களா!!
விஜய் டிவியிருந்து பல நடிகர், நடிகைகள் தற்போது சினிமாதுறையில் கொடிகட்டி பறக்கின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக பட்டையை கிளப்பி வருபவர் ரோபோ சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் இவர் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.
அதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் பிரபலமடைந்ததை தொடர்ந்து தற்போது சினிமாவிலும் அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக கலக்கி வருகிறார். ரோபோ சங்கர் கடந்த 2002 ஆம் ஆண்டு பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். அவர்களில் ஒரு மகள் இந்திரஜா விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்திலும், கார்த்தியின் விருமன் படத்திலும் நடித்துள்ளார். ரோபோ சங்கர் ஆரம்பத்தில் பாடி பில்டராக இருந்துள்ளார். அவர் மிஸ்டர் மெட்ராஸ் உள்ளிட்ட பல பட்டங்களை வென்றுள்ளாராம். இந்நிலையில் ரோபோ சங்கரின் பாடி பில்டிங் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.