பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
யாருகிட்ட.. மீண்டும் பழைய பார்முக்கு திரும்பி, ஃபுல் எனர்ஜியோட குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர்.! வைரல் கலக்கல் வீடியோ!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தனது மிமிக்ரி திறமையால் பிரபலமடைந்தவர் ரோபோ சங்கர். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் சினிமா துறையில் காலடி பதித்து தற்போது அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து சிறந்த நகைச்சுவை நடிகராக கலக்கி வருகிறார்.
ரோபோ சங்கர் கடந்த 2002 ஆம் ஆண்டு பிரியங்கா என்ற நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இருமகள்கள் உள்ளனர். கட்டுமஸ்தான உடலமைப்புடன் பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றத்தில் இருந்த ரோபோ சங்கர் தற்போது உடல் எடை குறைந்து எலும்பும் தோலுமாக மாறியுள்ளார். மேலும் அவருக்கு கடந்த ஆறு மாதங்களாக மஞ்சள் காமாலை இருந்ததாகவும், அதிகமான அசைவ உணவுகளை எடுத்துக்கொண்டதாலும், மது அருந்தியதாலும் அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும் அவர் எழுந்து நிற்க முடியாத அளவிற்கு அவதிப்படுவதாகவும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் ரோபோ சங்கர் தான் நடனமாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் மதுரை முத்து இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து திரும்பி வாங்க அண்ணே என கூறியுள்ளார்.