மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. வேற லெவல்தான்! குடும்பத்துடன் சேர்ந்து ரோபோ ஷங்கர் செய்த வேலையை பார்த்தீங்களா.! வைரலாகும் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் வெள்ளித்திரையில் காலடி பதித்து வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
இதற்கிடையில் நடிகர் ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் அதனால் கட்டுமஸ்தான உடலமைப்புடன்,கம்பீரமாக இருந்த ரோபோ சங்கர் உடல் எடை குறைந்து எலும்பும் தோலுமாக மாறினார். தற்போது நோயிலிருந்து மீண்டு வருகிறார். திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்கள் எனவும் கமிட்டாகியுள்ளார்.
மேலும் அவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ரோபோ சங்கர் சமூக வலைத்தளங்களில் குடும்பமாக ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவர் மனைவி, மகள் என குடும்பத்தினருடன் செம ஜாலியாக ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.