மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரோபோ ஷங்கரின் மகள், பிகில் பாண்டியம்மாவா இது! ஹீரோயின்களையே மிஞ்சிட்டாரே! படுமாடர்னாக வைரலாகும் புகைப்படம்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையான பேச்சால் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ரோபோ ஷங்கர். அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
மேலும் அவர் தீபாவளி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி, புலி போன்ற பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவரது மகள் இந்திரஜா, சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் இந்திரஜா மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.மேலும் அவர் பல டிக்டாக் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இந்திரஜா முதன்முறையாக படுஸ்டைலாக மாடர்ன் போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் ஹாலிவுட் நடிகையை போல படு மாடர்னாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.