பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சூப்பர் சார்..! இந்த இக்கட்டான சூழலிலும் நடிகர் ரோபோ சங்கர் செய்த மகத்தான காரியம்..! குவியும் வாழ்த்துக்கள்..!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மனஅழுத்தத்தை போக்க நடிகர் ரோபோ சங்கர் செய்துவரும் காரியம் மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பெருமளவில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுவருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பலர் மனஅழுத்தம் காரணமாக சோர்வடையும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அனுமதியின் பேரில் பட்டுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளுக்கு மன அழுத்தம் போக்குவதற்கான நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் சங்கர் ஆகியோர் பங்கேற்று கொரோனா நோயாளிகள் மத்தியில் ‘மிமிக்ரி’ செய்து நோயாளிகளை மகிழ்வித்தனர்.
இந்த நிகச்சி குறித்து பேசிய நடிகர் ரோபோ சங்கர், "கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தவேண்டுமே தவிர, அவர்களை ஒதுக்கக்கூடாது. அவர்களுடன் அன்போடு பேசி தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும், தனது சொந்த செலவில்தான் இந்த நிகழ்ச்சிகளை செய்துவருவதாகவும், தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களை சந்தித்து மகிழ்ச்சிபடுத்துவேன்" எனவும் கூறியுள்ளார் .