எல்லாம் வதந்தி.. என் வாழ்க்கையோட விளையாடாதீங்க.! ஆவேசமடைந்த நடிகை பவித்ரா லட்சுமி.!
வாய்ப்பு கொடுக்கலை, வாழ்க்கையே கொடுத்திருக்கார்.. தனுஷை புகழ்ந்து நெகிழ்ச்சியில் கண்கலங்கிய பிரபல நடிகர்!

பிரபல தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமாகி, தனது மிமிக்ரி திறமையால் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார் ரோபோ ஷங்கர். அதனை தொடர்ந்து சினிமாவில் களமிறங்கிய அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து கலக்கி வருகிறார். மேலும் இவரது மனைவியும் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கெடுத்து வருகிறார்.
அதுமட்டுமின்றி அவரது மகள் இந்திரஜாவும் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். நடிகர் ரோபோ ஷங்கர் சினிமா பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி.இந்நிலையில் தனுஷ் ரசிகர் ஒருவரின் உணவக திறப்பு விழாவில் ரோபோ ஷங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்பொழுது தனுஷ் குறித்து பேசிய அவர், தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் இல்லை, அதையும் தாண்டி வாழ்க்கை கொடுத்தவர். தென்னிந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் தனுஷ். கொரோனா நேரத்தில் என் பர்சனல் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் தவித்தேன். அப்பொழுது தனுஷுக்கு போன் செய்தேன். அவர் டெல்லி செல்ல தயாராகுவதாக கூறினார்.அந்த நேரத்தில் இதைக் கேட்கலாமா என்று யோசித்துகொண்டே தயக்கத்துடன் கேட்டேன். கேட்டவுடேனேயே எனக்குக் குடும்ப ரீதியான மிகப்பெரிய உதவியைச் செய்தார்.
நான் இன்று என் குடும்பத்துடன் மூன்று வேளை நிம்மதியாக சாப்பிட பல இயக்குநர்கள் ஆரம்பப் புள்ளியை வைத்திருந்தாலும், என் வாழ்க்கையை உயர்த்தியவர் நடிகர் தனுஷ்தான் என ரோபோ ஷங்கர் பெருமையாக கூறியுள்ளார்.