பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
எடை குறைந்து எலும்பும், தோலுமாக மாறிய ரோபோ சங்கர்.! இதுதான் காரணமா?? ஷாக்கான ரசிகர்கள்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ரோபோ சங்கர் . அதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் பிரபலமடைந்ததை தொடர்ந்து சினிமா துறையில் காலடி பதித்து தற்போது அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக கலக்கி வருகிறார்.
ரோபோ சங்கர் கடந்த 2002 ஆம் ஆண்டு பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இருமகள்கள் உள்ளனர். பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றத்தில் இருக்கும் ரோபோ சங்கர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது உடல் எடை குறைந்து எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. அது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
இதற்கு காரணம் ரோபோ சங்கருக்கு கடந்த ஆறு மாதங்களாக மஞ்சள் காமாலை இருந்ததாக கூறப்படுகிறது. அது அவருக்கு தெரியாமலே இருந்த நிலையில் வெளிநாட்டில் ஷூட்டிங் சென்ற ரோபோ சங்கருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் ரோபோ சங்கருக்கு அதிகமான அசைவ உணவுகளை எடுத்துக்கொண்டதாலும், மது அருந்தியதாலும் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.