96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அடஅட.. வேற லெவல்! ரவுடி பேபி பாடல் படைத்த அசத்தலான சாதனை! கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் அவ்வப்போது வெளிவரும் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து இணையத்தில் பெரும் சாதனை படைக்கும். அவ்வாறு தனுஷின் அசத்தலான ஆட்டத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பாடல் ரவுடி பேபி.
கடந்த 2018 ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று ஹிட்டான திரைப்படம் மாரி 2. இதில் ரோபோ ஷங்கர், வரலட்சுமி, கிருஷ்ணா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
அவரது இசையில் வெளிவந்த ரவுடி பேபி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பிரபலமாகி பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. இந்த பாடலுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த பாடல் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் யூடியுப் மூலம் ரவுடி பேபி பாடல் 1200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.