பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தென்னிந்திய சினிமாவிலையே இதுதான் முதல் முறை.. 100 கோடி பேர்.. கொலவெறி நாளில் சாதனை படைத்த ரவுடி பேபி..
ரவுடி பேபி பாடல் யூடியூப் வலைத்தளத்தில் 100 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
தனுஷ் - சாய் பல்லவில் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் உலகம் முழுவதும் ஹிட் அடித்து செம வைரலானது. இந்த பாடல் வெளியான நாளில் இருந்து இன்றுவரை 100 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இதுவரை எந்த ஒரு தென்னிந்திய சினிமா பாடலும் 100 கோடி பார்வைகளை கடக்கவில்லை.
ரவுடி பேபி பாடல்தான் 100 கோடி பார்வைகளை கடந்த முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதில் மேலும் ஒரு மகிழ்ச்சியான தகவல் என்னவென்றால், இதற்கு முன்னதாக யூடியூப் வலைத்தளத்தில் ஹிட் அடித்த தனுஷின் ஒய் திஸ் கொலவெறி டி பாடல் வெளியாகி 9 ஆண்டின் அதே நாளில் ரவுடி பேபி பாடல் 100 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகர் தனுஷ், படக்குழு சார்பாக அனைவர்க்கும் மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார். ரவுடி பேபி பாடலின் இந்த அபரா வெற்றிக்கு நடிகை சாய் பல்லவியின் அசத்தலான நடனம் ஒரு முக்கிய காரணம் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. அதேபோல் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் அந்த பாடலுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.
What a sweet coincidence this is ❤️❤️ Rowdy baby hits 1 billion views on same day of the 9th anniversary of Kolaveri di. We are honoured that this is the first South Indian song to reach 1 billion views. Our whole team thanks you from the heart ❤️❤️
— Dhanush (@dhanushkraja) November 16, 2020