மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல கன்னட நடிகை.. வெளியான அசத்தல் தகவல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். எந்த திரைப்படத்தை ஸ்பைடர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இவரது நடிப்பில் கடந்தாண்டு கன்னடத்தில் வெளியான 'சப்த சாகரதாச்சே எல்லோவில்' என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. .