மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. இதுதான் கதையா.?மோகன் ஜியின் அடுத்த பரபரப்பு.! ருத்ரதாண்டவம் டிரைலர் வெளியீடு.!
மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் நடிப்பில் குறைந்த பட்ஜெட் தொகையில் படமாக்கப்பட்டு வெற்றிப்படமாக்கிய திரைப்படம் திரௌபதி. நாடக காதல் அதன் பின்னால் இயங்கும் கும்பல் என்ற கருவை வைத்து வெளிவந்த “திரௌபதி” படம் சர்ச்சைகளையும், பாராட்டுகளையும் பெற்றது.
இந்நிலையில் மோகன் ஜி தனது இரண்டாவது படத்திற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டார். ”ருத்ர தாண்டவம்” என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் திரௌபதி படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட்ஸ், கௌதம் மேனன் மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியாகியுள்ளது. இதில், வன்கொடுமை சட்டத்தால் (PCR) தமிழகத்தில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்றும், மதமாற்றம், ஜாதி அரசியல் மற்றும் பிசிஆர்., சட்டங்கள் ஆகியவற்றை இந்தப்படம் பேச போகிறது என்பதை டிரைலரை பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப்படமும் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.