பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கண்ணீருடன் பேட்டியளித்த பாக்கியராஜ் பட நாயகி.!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து, பின்னர் சின்னத்திரைக்கு வந்தவர்தான் நடிகை சுலக்சனா.
இவர் கதாநாயகியாக நடித்த ஆயிரம் நிலவே வா இன்று நீ நாளை நான் பூம்பூம் மது அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை தூரல் நின்னு போச்சு போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தது.
தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த கதாநாயகிகளில் இவரும் ஒருவர். ஆனால் தற்போது இவர் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார் இந்த நிலையில் அடிக்கடி பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வழங்கிய பேட்டியில் தன்னுடைய வாழ்வில் நடந்த ஒரு சோக சம்பவம் குறித்து தெரிவித்திருக்கிறார்.
பேட்டியின்போது பேசிய அவர்” எனக்கு 18 வயது இருக்கும் போதே திருமணம் முடிந்துவிட்டது. நான் பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மகன் கோபிகிருஷ்ணனை திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு மூன்று குழந்தைகள். என்னை பொறுத்தவரை என்னுடைய குணம் எந்தவொரு உறவிலும், சரியாக செட்டாகவில்லையென்றால், சண்டையிடுவதை விட பிரிந்து செல்வது நல்லது. ஒன்றாக சண்டையிடுவதை விட நண்பர்களாக இருப்பது நல்லது.
அதே சமயம் நீங்கள் விவாகரத்து பெற, அந்த வலியைதாங்கிக் கொள்ள வேண்டும். அந்த தைரியம் உங்களுடைய மனதில் இருக்கவேண்டும். இப்படி விவாகரத்து செய்வதால் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். நான் 23 வயதில் விவாகரத்து பெற்றேன். அதன் பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே வரவில்லை. முழுவதுமாகவே நன் குழந்தைகளுக்காக மட்டுமே வாழ்ந்தேன்.