மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை சாய்பல்லவியை முத்த காட்சிக்காக வற்புறுத்திய இயக்குனர்! ஒத்த வார்த்தையால் காப்பாற்றிவிட்ட ஹீரோ! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!
மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பிரேமம். இந்த திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சாய்பல்லவி. அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படவாய்ப்புகள் குவிய தொடங்கியது.
மேலும் சாய்பல்லவி தமிழில் நடிகர் சூர்யாவுடன் என்.ஜி.கே மற்றும் தனுஷுடன் மாரி 2 திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரவுடி பேபி என்ற பாடலுக்கு இவர் ஆடிய நடனம் உலகளவில் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானது. அவர் தற்போது பாவக் கதைகள் என்கிற ஆந்தாலஜி படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சாய்பல்லவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் மீ டூ இயக்கம் தன்னை காப்பாற்றியது குறித்து கூறியுள்ளார். அவர் கூறுகையில், ஒரு படத்தின் இயக்குனர் என்னை முத்த காட்சியில் நடிக்கும்படி மிகவும் வற்புறுத்தினார். ஆனால் நான் அப்படி நடிக்க முடியாது என்று மறுத்தேன். ஆனாலும் தொடர்ந்து வற்புறுத்திய நிலையில்,அந்த படத்தின் ஹீரோ இயக்குனரை பார்த்து இந்த பிரச்சினையை மீ டூ இயக்கத்துக்கு கொண்டு சென்றால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதன்பிறகு இயக்குனர் முத்த காட்சியில் நடிக்கும்படி என்னை கேட்கவில்லை. மீ டூ என்னை தப்பிக்க வைத்தது என்று கூறியுள்ளார்.