மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகையாக களமிறங்கும் சாய்பல்லவியின் தங்கை! அதுவும் யார் படத்தில் பார்த்தீர்களா!!
மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சாய்பல்லவி. அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படவாய்ப்புகள் குவிய தொடங்கியது.
மேலும் சாய்பல்லவி தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே என பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி கைவசம் தற்போது ராணாவுடன் விராட பருவம், நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, பவன் கல்யாணுடன் ஒரு படம் உள்ளது.
நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா. அவரும் தற்போது நடிகையாக அறிமுகவுள்ளாராம். அதாவது பூஜா ஏ.எல்.விஜய் தயாரிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் நடிகர் சமுத்திரகனியின் மகளாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பூஜா இதற்கு முன்பு இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.