மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. தலைவி வேற லெவல்.! புதிய படங்களில் நடிக்க சாய்பல்லவி போட்ட பக்கா கண்டிஷன்.!
பிரேமம் என்ற மலையாள படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அவர் இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
பின்னர் தமிழில் தியா என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த அவர் தொடர்ந்து மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கிலும் அவரது கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. புதிய பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இந்த நிலையில் சாய்பல்லவி புதிய படங்களில் நடிக்க விதித்த நிபந்தனைகள் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, நான் படத்தின் கதை மற்றும் எனது கதாபாத்திரம் தேர்வு செய்வதில் மிக கவனமாக இருக்கிறேன். அவற்றில் எனக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். படத்தின் கதாபாத்திரம் உண்மையில் என்னோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும். பெரிய பட நிறுவனமாக இருந்தாலும் எனக்கு ஏற்ற கதையாக இருந்தால், எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வேன். அந்த கதாபாத்திரம் புதிதாகவும், எனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையில் இருத்தல் வேண்டும் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.