மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இது மிகவும் கேவலமான செயல்! போலி ரசிகர்கள் மீது பாய்ந்த சாய்பல்லவி!!
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகை சாய் பல்லவி. இவர் நடித்து வெளியான ப்ரேமம் திரைப்படம் மூலம் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை தன்வசம் படுத்தி கொண்டார்.
இவரது நேர்த்தியான நடிப்பின் மீது ஈர்ப்பு கொண்ட ரசிகர்கள் பலர் இவரை பொது வாழ்க்கையிலும் பின் பற்றி வருகின்றனர். பலருக்கு ரோல் மாடலாகவே உள்ளார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சாய்பல்லவி ஒரு ஆணுடன் மாலையுடன் இருக்கும் புகைப்படம் ஒரு சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு அவருக்கு திருமணம் நடைபெற்றதாக வதந்தி பரவி வருகிறது.
இதுகுறித்து நடிகை சாய்பல்லவி, அவரது அதிகாரபூர்வ X தளத்தில் இதற்கான பதிலடியாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் :-
"உண்மையாகவே, நான் வதந்திகளைப் பற்றி கவலைப்படுவதில்லை, ஆனால் அது குடும்பம் மற்றும் நண்பர்களை உள்ளடக்கி வரும் போது, நான் பேசியாக வேண்டும்.
எனது புதிய திரைப்படத்தின் பூஜை விழாவில் எடுத்த ஒரு புகைப்படத்தை வேண்டுமென்றே செதுக்கப்பட்டு, பணம் கொடுத்தும் கேவலமான நோக்கத்தோடும் பரப்பப்பட்டுள்ளது.
எனது வேலையில் மகிழ்ச்சியான அறிவிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, இந்த வேலையில்லாதவர்கள் செய்யும் செயல்களுக்கு விளக்கமளிப்பது வருத்தமளிக்கிறது.
இது போன்ற அசௌகரியத்தை செயலை செய்வது முற்றிலும் கேவலமானது!" என்று அவர் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.