மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிரடி., சரவெடி.. ரூ.500 கோடி வசூலை கடந்தது சலார் திரைப்படம்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
பிரபாஸ், ஜெகபதி பாபு, பிரித்விராஜ் சுகுமாரன், சுருதிஹாசன், மைம் கோபி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் சலார் (Salaar). கடந்த 22ம் தேதி திரையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் இப்படம் வெளியானது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில், ரவி பஸ்ரூர் தயாரிப்பில் வெளியான சலார் திரைப்படம், முதல் நாளில் மட்டும் ரூ.170 கோடியை கடந்து வசூல் இமாலய சாதனை படைத்தது.
𝑫𝑬𝑽𝑨 𝑹𝑬𝑷𝑨𝑰𝑹𝑰𝑵𝑮 𝑩𝑶𝑿 𝑶𝑭𝑭𝑰𝑪𝑬 𝑹𝑬𝑪𝑶𝑹𝑫𝑺 💥#SalaarCeaseFire has crossed a massive ₹ 𝟓𝟎𝟎 𝐂𝐑𝐎𝐑𝐄𝐒 at the worldwide box office (𝐆𝐁𝐎𝐂)#SalaarCeaseFireHits500Crs#Salaar #Prabhas #PrashanthNeel @shrutihaasan @VKiragandur @hombalefilms… pic.twitter.com/kJ7CkommmR
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) December 28, 2023
இந்நிலையில், சலார் திரைப்படம் உலகளவில் ரூ.500 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது. படம் வெளியான 6 நாட்களில் ரூ.500 கோடியை கடந்து இருப்பது, திரைப்பட குழுவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் நடப்பு ஆண்டில் இறுதியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்த படத்தின் பட்டியலில் சலார் இணைந்துள்ளது. கடந்த ஆண்டு இதேபோல அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் வெளியாகி ஏகபோக வரவேற்பு மற்றும் வசூல் சாதனை புடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.