மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் உருவான சலார் படம் நாளை வெளியாகிறது: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
கே.ஜி.எப் 1 & 2 என இரண்டு பாகங்களின் மாபெரும் வெற்றிக்கு பின்னர், இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சலார்.
இப்படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாரன், சுருதி ஹாசன், ஜெகபதி பாபு, மீனாக்ஷி சௌதாரி, சரண் சக்தி, ஈஸ்வரி ராவ் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
ரவி பஸ்ரூர் இசையில், ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உட்பட பல மொழிகளில் டிசம்பர் 22, 2023 (நாளை) அன்று வெளியாகிறது.
படத்தின் இரண்டு டிரைலர், பாடல் காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தன. இத்திரைப்படம் மொத்தமாக 2 மணிநேரம் 55 நிமிடங்கள் ஓடுகின்றது.
இதனால் பிரபாஸின் ரசிகர்கள் இன்று இரவு முதலாகவே கொண்டாட்டங்களில் ஈடுபட தயாராகியுள்ளனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.