திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"சலார் திரைப்படத்தால் என் தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பு" கண்ணீர் சிந்திய இயக்குனர் பிரசாந்த் நீல்..
2014ம் ஆண்டு "உக்ரம்" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரஷாந்த் நீல். இதையடுத்து இவர் இயக்கிய கே ஜி எப் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் அவரை உலகளவில் மிகவும் பிரபலமாக்கியது. பாக்ஸ் ஆபீசில் மாபெரும் சாதனையைப் புரிந்தது கே ஜி எப்.
இதையடுத்து பிரஷாந்த் நீல் பிரபாஸை வைத்து "சலார்" படத்தை இயக்கியுள்ளார். டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியான சலார் திரைப்படம் முதல் நாளிலேயே 175கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.
விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இப்படத்தின் மூலம் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து மனம் திறந்துள்ளார் பிரஷாந்த் நீல். அவர் கூறியதாவது, "படப்பிடிப்பில் முழுமூச்சாக ஈடுபட்டு இருந்ததால் குடும்பத்துடன் இருக்கமுடியவில்லை.
என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல அப்பாவாகவும், என் மனைவிக்கு ஒரு நல்ல கணவனாகவும் இருக்க முடியாமல் போனது. என் குழந்தைகள் என்னை நினைத்து அழுதால் மட்டுமே அவர்களை பார்க்க நான் வீட்டிற்கு சென்றேன். அதுவும் 3 மாதத்திற்கு ஒரு முறை தான்" என்று கூறியுள்ளார்.