திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சம்பளத்தில் போட்டிபோடும் த்ரிஷா மற்றும் நயன்தாரா.! கோடிகளை குவிக்கும் நடிகைகள்..
2023 வருடம் முன்னணி நடிகைகளாக இருந்து வருபவர்கள் நயன்தாரா மற்றும் திரிஷா. 20 வருடங்களுக்கு மேல் திரை துறையில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறது. இவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்த திரைப்படங்கள்.
இதில் நயன்தாரா தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டி லேடிஸ் சூப்பர் ஸ்டார் என பெயர் பெற்றுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில திரைப்படங்கள் தோல்வி அடைந்தாலும் இவரின் சம்பளம் எதிரி கொண்டே தான் போகின்றது.
இது போன்ற நிலையில் திரிஷா மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் தனது செகன்ட் இன்னிங்ஸ்சை தொடங்கி பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவ்வாறு முன்னணி நடிகர்களாக இருந்து வரும் திரிஷா மற்றும் நயன்தாராவின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா ஒரு படத்தில் நடிப்பதற்கு 11 கோடி முதல் 14 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். த்ரிஷா 10 கோடி தான் சம்பளத்தை பெறுகிறார். இதனால் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது என்று திரைத்துறையில் பேசி வருகின்றனர்.