கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ரசிகருக்கு ஆதரவாக பேசி சிக்கலில் சிக்கிய சமந்தா! கொதிக்கும் நெட்டிசன்கள்
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா தெலுங்கு திரையுலகின் இளம் கதாநாயகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் ஆவார்.
கடந்த நவம்பர் 23ஆம் தேதி நாக சைதன்யாவின் பிறந்தநாளினை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். நாக சைதன்யா தனது மனைவி சமந்தாவுடன் பிறந்தநாளை கொண்டாடினார்.
ஆனால் பொப்பிலி என்ற பகுதியை சேர்ந்த ரசிகர் ஒருவர் வித்தியாசமான முறையில் நாக சைதன்யாவின் பிறந்தநாளினை கொண்டாடியுள்ளார். அந்த பகுதியில் மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சிம்மாச்சலம் கோவிலுக்கு 1000 படிகட்டுகளை முட்டிபோட்டு சென்றுள்ளார் அந்த ரசிகர்.
இதுகுறித்து கூறியுள்ள அவர் நாக சைதன்யா மற்றும் சமந்தா ஜோடிக்கு விரைவில் குழந்தை பிறக்க வேண்டுமென்று வேண்டி தான் இப்படி செய்ததாக கூறியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் ட்விட்டரில் வைரலானது.
இதனைக் கண்ட நடிகை சமந்தா, "நன்றி.. இது மிகவும் வியப்பாக உள்ளது, நன்றி சொல்ல வார்த்தையே இல்லை.. நீங்கள் எங்களை சந்திக்க வேண்டும்" என ரசிகருக்கு உற்சாகமூட்டும் வண்ணம் பதிலளித்துள்ளார்.
ரசிகர்களின் இத்தகைய முட்டாள்தனமான செயல்களை ஆதரிப்பது சரியல்ல என பலர் சமந்தாவை கோபமாக திட்டியுள்ளனர். இப்படிப்பட்ட காரியங்களை செய்ய ரசிகர்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட ஊக்கமளிக்குமாறும் கேட்டுள்ளனர்.
Thankyou ... this is incredible .. speechless 🙏 please meet us 🙏🤗 https://t.co/zgy03ZLfft
— Samantha Akkineni (@Samanthaprabhu2) November 24, 2019