53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
இந்த சின்ன வயசுல நடிகை சமந்தாவுக்கு இப்படி ஒரு வியாதியா?? வேதனையில் ரசிகர்கள்..
தனக்கு இருக்கும் வியாதி குறித்து நடிகை சமந்தா முதன் முறையாக பதிவிட்டுள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவில் சாதனை பெண்ணாக இருக்கும் இவருக்கு, திருமண வாழ்க்கை கைகொடுக்கவில்லை. பிரபல நடிகரை திருமணம் செய்துகொண்ட சமந்தா அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தனக்கு ஏற்பட்டிருக்கும் வியாதி குறித்து முதல் முறையாக பதிவிட்டுள்ளார் சமந்தா. அதில், "Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் பிரச்னை (இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவது) இருப்பது கண்டறியப்பட்டது. முழுமையாக குணமடைந்த பிறகு தெரிவிக்கலாம் என தான் நினைத்திருந்ததாகவும், ஆனால் இந்த பிரச்னை குணம் அடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும் என்பதால் தனது ரசிகர்களிடம் தற்போது தெரிவிப்பதாகவும் சமந்தா கூறியுள்ளார்."
ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்கு சமந்தா டப்பிங் கொடுத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தநிலையில், தற்போது இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு கூடுதல் கவலையை கொடுத்துள்ளது.