மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. எல்லாம் வேற லெவல்.! நடிகை சமந்தாவிடம் எத்தனை கார்கள் இருக்கு பார்த்தீங்களா.!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது படங்கள், வெப் சீரிஸ் என நடித்து வரும் அவர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். நடிகை சமந்தாவிற்கு கார் வாங்குவது என்றால் மிகவும் பிடிக்குமாம். இந்த நிலையில் தற்போது அவர் வைத்திருக்கும் கார்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
அவரிடம் ரூ 3.30கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 எஎம்ஜி கார், ரூ 2.26 கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் கார், ரூ1.70கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யு 7 சீரிஸ் கார், ரூ 1.46கோடி மதிப்புள்ள போர்ஷே கேமேன் ஜிடிஎஸ் கார், 87 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆடி கியு 7 கார், 72 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஜாகுவார் எக்ஸ்எப் கார் ஆகியவை உள்ளதாம்.
மேலும் அவருக்கு ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் ஆடம்பர வீடும், மும்பையில் 15 கோடி மதிப்புள்ள வீடும் இருப்பதாக கூறப்படுகிறது. சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 110 கோடி இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.